Ebinesare (Naanum En veedum)

Song by: John jebaraj

நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும்
ஓயாமல் நன்றி சொல்வோம்-2

ஒரு கரு போல காத்தீரே நன்றி
என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2

எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே
எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே

நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி
நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி

1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு
நன்மையால் நிறைந்துள்ளதே-2
ஓரு தீமையும் நினைக்காத நல்ல
ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2 -எபிநேசரே

2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும்
உம் கரம் நல்கியதே-2
நீர் நடத்திடும் விதங்களை சொல்ல
(ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2 -எபிநேசரே

3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
அழைத்தது அதிசயமே-2
நான் இதற்கான பாத்திரம் அல்ல
இது கிருபையே வேறொன்றும் இல்ல-2 -எபிநேசரே


0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !