Listen to this post in Tamil

இப்பூவுலகில் எத்தனையோ கோடிக்கணக்கான புத்தகங்கள் உண்டாகியிருந்தாலும், அந்த புத்தகங்களுக்கும், இந்த பைபிள் என்கிற விவிலியத்திற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற புத்தகங்களெல்லாம் மனிதனின் கற்பனையினாலும், அறிவினாலும் உண்டானவைகள். ஆனால், பைபிளோ, மனித அறிவுக்கும் மேலான தெய்வீக அறிவினால் உண்டானது. தேவனுடைய சக்தி (வல்லமை)யாகிய பரிசுத்த ஆவியினால் தேவனடியார்கள் ஏவப்பட்டு, எழுதியது தான் பைபிள். இது ஜீவனுள்ள புத்தகம்; இது விலைமதிப்பற்ற பொக்கிஷம்; இது நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கிற, இனி நடக்கப்போகிற உலகக் காரியங்களைத் தீர்க்கதரிசனமாக, மிகவும் தீர்க்கமாக உரைக்கிறது. இதுதான், ஒன்றான மெய்த்தேவனால் கொடுக்கப்பட்ட ஒரே வேதம் என்பதற்கு இது தனக்குத்தானே சாட்சி பகர்ந்தாலும், இதற்கான ரூபகாரத்தை ஞானமாக வேதப்படி புத்தியுக்தியின்படி தியானிப்போம்.

1. இது உலகிலேயே புராதனப் புத்தகம்; சுமார் 30 நூற்றாண்டுகளாகக் காக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது சுமார் 1800 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும்மல்ல ஒரே மொழியில் பலமுறை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அழிக்க நினைத்தவர்களால், அழிக்கக் கூடாமற் போயிற்று. மேலும் 1600 வருட காலப்பகுதியில் சில மொழிகளில் சுமார் 48 எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இந்த வேதம் 66 புத்தகங்களைக்கொண்டது. இவைகளெல்லாம் ஒன்றுக்கொன்று இசைந்து இருக்கிறது. இப்படிப்பட்ட சிறப்பு வேறு எந்த புத்தகத்திலும் பார்க்க முடியாது.

2. ஒரு புத்தகம் எழுதுமுன், அதை எழுத ஒரு காரணம் இருக்கவேண்டும். பைபிளை எழுதியவர்கள் இதை என்ன காரணத்தினால் தங்கள் தலையில் போட்டுக் கொண்டார்கள்? இயேசு கிறிஸ்துதான் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டவராயிற்றே. அவரைப்பற்றி ஏன் எழுதவேண்டும்? மேலும் கிறிஸ்துவின் துன்ப காலத்தில் அவரைக் விட்டு ஓடிய அவருடைய சீஷர்கள், அவர் இறந்தபின் தைரியமாய் அவரைக்குறித்து பிரசங்கிக்க ஏவியது என்ன? அவரைக் கொலை செய்தவர்களைக் கண்டிக்க தைரியம் எப்படி வந்தது? இவர்கள் இயேசுவைப் பற்றி பிரசங்கித்ததால் கிடைத்த பலன் என்ன? பணமா, புகழா, பெருமையா என்ன? இயேசு கிறிஸ்துவைப்போல் துன்பமும், கஷ்டமும்பட்டு தங்கள் வீடுகளையும், இனத்தார்களையும் விட்டுப் பிரிந்து, கடைசியில் துர்மரணம் அடைந்தார்கள். ஆகையால், அவர்களது நோக்கம், பரிசுத்தமானதாக மேன்மையானதாக இருந்திருக்கவேண்டும்.

3. இதை எழுதியவர்கள், தாங்கள் செய்த தவறுகளையும் இதில் எழுதியுள்ளார்கள், சுய சித்தமாய் எழுதி இருந்தால், தங்கள் தவறுகளை மறைத்து அல்லவா எழுதியிருப்பார்கள்.

  • மோசே செய்த பாவம் – எண். 20:7-13
  • தாவீது செய்த பாவம்-II சாமு 11, 12, 24 அதிகாரங்கள்
  • யோனாவின் பாவம் -யோனா முதல் அதிகாரம்.

0 Comments

Leave a Reply

Open chat
1
Scan the code
Join our Whatsapp group
Hello 👋
Praise the lord !