–பேராயர் V.S. அசரியா
திடீரென்று வயிற்று வலியால் துடித்த மகனை மருத்துவரிடம் தூக்கிச்சென்றாராம் தகப்பனார், மருத்துவர் பரிசோதித்துவீட்டு வயிற்று வலிக்குரிய (Symptoms) ஏது காரணங்கள் ஒன்றும் இல்லையே சொன்னார். இதைக் கேட்ட சிறுவன் அதை மறுத்து வயிற்றுவலிக்குக் காரணம் கருப்புப் பூனை ஒன்று வயிற்றில் இருந்து கத்துவதாகக் கூறினான்? மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் பையன் கேட்பதாக இல்லை. செயலற்றுப்போன மருத்துவருக்கு ஒரு idea உருவானது…. என்ன அது?
கருப்புப்பூனை ஒன்றை கடையில் வாங்கி கூண்டில் அடைத்து விட்டார். அறுவைச் சிகிச்சைக்கு நாளும் குறிக்கப்பட்டு சிறுவனை அறுவை சிகிச்சைக்குக் கொண்டு வந்தாகிவிட்டது.
கருப்புப்பூனை கத்தியதாலும், உள்ளே ஓடியாடி தொந்தரவு செய்ததாலும் இரவும் பகலும் தடித்துப்போன சிறுவனுக்கு அன்றைய தினம் விடுதலை கிடைக்கும் தினம்! அறுவை சிகிச்சையறைக்குள் கொண்டு செல்லப்பட்டான்.
அறுவை சிகிச்சைக்கு அடையாளமாய் வயிற்றில் சிறிது கீறி விட்டார் மருத்துவர்; சிறுவன் மயக்கம் தெளிந்ததும் கருப்புப்பூனை எங்கே? என்றான். நீ சொன்னது போலவே கருப்புப்பூனை இருந்தது என ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூனையை கொண்டு வந்து காண்பித்தார். சமயோசித புத்தியால் அச்சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அந்த மருத்துவர். சிறுவனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!.
எச்சரிக்கை! சந்தேகம் என்பது சந்தோஷத்தை, சமாதானத்தை. குடும்பத்திலிருந்து மனதிலிருந்து எடுத்துவிடும் கருப்புப்பூனை போன்ற சில தீய பழக்கங்கள், உறவுகள், பாவங்கள் உன் வாழ்க்கையில் கத்துமானால் அதை வெளியே எடுத்துவிடுவது நல்லது.
0 Comments